உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூர்வீக வீட்டை விற்ற அமிதாப் பச்சன்

பூர்வீக வீட்டை விற்ற அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்து வளர்ந்த வீடு தெற்கு டில்லி குல்மோகர் பூங்கா பகுதியில் உள்ளது. அமிதாப் மும்பைக்கு நடிப்பு வாய்ப்பு தேடிச் செல்லும்வரை இங்குதான் வசித்து வந்தார். பல ஆண்டுகள் அமிதாப்பின் தந்தை தேஜி பச்சனும், தாய் ஹரிவன்ஷ்ராய் பச்சனும் இங்கு வாழ்ந்து வந்தனர். பின்னர் அதனை அமிதாப் பூட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் அந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரரும், குடும்ப நண்பரும், நெசோன் குழும தலைமை செயல் அதிகாரியுமான அவ்னி பேடருக்கு விற்றுள்ளார். இந்த வீடு 23 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு மும்பையில் ஏற்கெனவே 5 பங்களா வீடுகள் உள்ளது. இது தவிர சமீபத்தில் அந்தேரி பகுதியில் 31 கோடி ரூபாய்க்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் டூபிளக்ஸ் வீடு ஒன்றை வாங்கினார். டில்லி பூர்வீக வீட்டை பராமரிக்க முடியாமல் விற்றுள்ளார். இன்னும் கூடுதல் விலைக்கு பலர் கேட்டும் குடும்ப நண்பருக்கு அதனை விற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !