உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் படத்தை வெளியிடும் உதயநிதி

பிரபாஸ் படத்தை வெளியிடும் உதயநிதி

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் ராதே ஷ்யாம். யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே ஹீரோயின். பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். பின்னணி இசையை எஸ் எஸ் தமன் அமைத்துள்ளார்.

காதலுக்கும் விதிக்கும் இடையே நடைபெறும் போராட்டமான 'ராதே ஷ்யாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். அவரது காதலியாக டாக்டர் பிரேர்னா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி உள்ளது. வருகிற மார்ச் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. 400 தியேட்டர்களில் வெளியாகும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !