மேலும் செய்திகள்
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்
1311 days ago
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
1311 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
1311 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் மற்றும் காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் குதிரை, ஆலிஸ் என அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய்யை வைத்து சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்திலும் ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா போன்ற நடிகைகள் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் தற்போது இன்னொரு முக்கிய வேடத்திற்கு ரைசா வில்சன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு பாடகி வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நான் நடிக்காத வேடம். அதோடு மிகவும் கலகலப்பான வேடம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
1311 days ago
1311 days ago
1311 days ago