இந்திய இசைக்குயில் மவுனம் ஆனது: லதா மங்கேஷ்கர் காலமானார்
ADDED : 1340 days ago
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை உயிர் இழந்தார். லதா மங்கேஸ்வரின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.