விஜய் சேதுபதிக்காக ‛வெயிட்டிங்'
ADDED : 1338 days ago
அசுரன் படத்தை அடுத்து சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நாயகியாக நடிக்க, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள். காரணம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் விடுதலை படத்துக்கு அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். அதன் காரணமாகவே சூரி மற்ற படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி கால்சீட் கொடுக்கும்போது தான் விடுதலை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.