பர்கான் அக்தர் 2வது திருமணம் : பாடகியை மணக்கிறார்
ADDED : 1357 days ago
பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர். ராக், மில்கா சிங், லக்ஷயா, டான் 2, டோபான், கேஜிஎப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். தற்போது மிஸ்டர் மார்வெல் என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
2000மாவது ஆண்டில் பர்கான் அக்தர், அதுனா பாபனி என்பவரை திருமணம் செய்தார். 17 வருட வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பாலிவுட் நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கரை காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். வருகிற 21ம் தேதி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.