ஸ்ரீவள்ளியை பாடிய எம்மா ஹீஸ்டர்ஸ்
ADDED : 1335 days ago
உலக புகழ்பெற்ற பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ். டச்சு நாட்டுக்காரர். இவரது பாடல்கள் உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை ஆங்கிலமும், ஹிந்தியும் கலந்து பாடி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் உலகம் முழுக்க பரவி உள்ளது. பல முன்னணி பாடகர்கள், பாடகிகள் அதனை பாடி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். எம்மா ஹீஸ்ட்டர்ஸ் பாடியுள்ள வீடியோவே இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கை அச்சு அசலாக பாடி உள்ள எம்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.