35 கிலோ வெயிட் குறைத்த இசையமைப்பாளர் தமன்!
ADDED : 1333 days ago
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், அதன் பிறகு ஷங்கர் தயாரித்த ஈரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். சமீபகாலமாக தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் தமன் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படத்திற்கும் இவர் தான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 135 கிலோ வெயிட் இருந்த தமன் தற்போது தனது உடல் எடையை 35 கிலோ குறைத்திருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பெரிய அளவில் வெயிட் போட்டு இருந்த இசையமைப்பாளர் டி. இமான், நடிகர் சிம்பு ஆகியோர் பாணியில் தற்போது தமனும் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார்.