உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வடிவேலுவுடன் இணைந்த பிரபுதேவா

வடிவேலுவுடன் இணைந்த பிரபுதேவா

சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இதில் பிரிய பவானி சங்கர், ஷிவானி, ரெடிங் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது சென்னையில் வடிவேலு நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது, இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து வருகிறார். இதற்கு முன்பு வடிவேலு - பிரபுதேவா இருவரும் இணைந்து சில படங்களில் நடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !