அஜித் அரசியலுக்கு வரவேண்டாம் : சுசீந்திரன்
ADDED : 1328 days ago
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை அடுத்து தற்போது ஜெய் நடிப்பில் வீரபாண்டியபுரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சுசீந்திரன், முன்பு ஒருமுறை அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் தற்போது அவர் நல்ல திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவர் அரசியலு க்கு வரத் தேவையில்லை என்றார் சுசீந்திரன். இந்த வீரபாண்டிய படம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜெய் நாயகனாக மட்டுமின்றி இசை அமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.