மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1328 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1328 days ago
நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் நடிப்பதற்கு முன்பே ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தவர். அதன்பிறகு தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் பரவலாக நடித்து வருகிறார். இவருடன் 2012ல் ஹிந்தியில் ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் பிபாஷா பாசு. இவர் தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியது குறித்து ஒரு காரணத்தை வெளியிட்டுள்ளார் பிபாசா பாசு.
அவர் கூறுகையில், மாதவனுடன் முத்தக்காட்சிகளில் நடிக்குமாறு இயக்குனர் கூறியபோது அவரது மனைவி அருகில் இருந்ததால் தயக்கமாக இருந்தது. ஆனபோதும் இயக்குனரின் வற்புறுத்தலால் அந்த காட்சிகள் நடித்து முடித்தேன். ஆனால் அதற்கு முன்பு மாதவன் வெங்காயம் கலந்த உணவை சாப்பிட்டு இருந்ததால் அந்த வாசனை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கு சிறிது நேரம் அலர்ஜி ஏற்பட்டது. அதனால் அந்த முத்த காட்சியில் நடித்து முடித்ததும் நீண்ட நேரம் மேக்கப் ரூமில் போய் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
1328 days ago
1328 days ago