எச்சரித்த விஷால் பட நாயகி
ADDED : 1343 days ago
விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் நாயகியாக நடித்தவர் டிம்பிள் ஹயாதி. தெலுங்கிலும் நடிக்கும் இவர் சமூகவலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது பெயரில் போலியான எண் உருவாக்கி சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக இவருக்கு தகவல் வர, அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‛‛இந்த எண்ணில் இருந்து வரும் நபரை நம்பாதீர்கள், என் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுகிறார். இதை பிளாக் செய்துவிடுங்கள், புகாரும் தெரிவியுங்கள்'' என எச்சரித்துள்ளார் டிம்பிள்.