மூன்று மொழிகளில் ஐஸ்வர்யா ஆல்பம்
ADDED : 1330 days ago
தனுஷை பிரிந்துவிட்ட நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து ஆல்பம் பணிகளில் தீவிராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த ஆல்பத்தின் புரொமோ வெளியாகி உள்ளது. முசாபிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. அன்கித் திவாரி இசையமைக்க, தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர் பாடி உள்ளனர்.