உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 மொழி படத்தில் நடிக்கும் தமன்னா

3 மொழி படத்தில் நடிக்கும் தமன்னா

தமிழில் கடைசியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்த தமன்னாவுக்கு அதன்பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லை. என்றாலும் தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் தமன்னா, அடுத்தப்படியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஹிந்தி இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கும் இந்த படத்திற்கு பாப்லி பவுன்சர் என்று ஹிந்தியில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமன்னாவுடன் சவுருப் சுக்லா, அபிஷேக் பஜாஜ். சாகில் ஆகியோரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !