சமந்தாவின் 'சாகுந்தலம்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 1326 days ago
காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'சாகுந்தலம்'. இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். சமந்தா இந்த படத்தில் சகுந்தலையாக நடித்துள்ளார். கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார்.இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார். படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமந்த வெள்ளை நிற உடையில் அடர்ந்த மரங்களுக்கு நடுவே அமர்ந்திருக்க, அவரை சுற்றி மான்கள், மயில்கள் கூட்டமாக இருப்பது போன்று பார்க்க அழகாக இந்த போஸ்டர் வடிவவமைக்கப்பட்டு உள்ளது.