சிரஞ்சீவியை இயக்கும் 'புஷ்பா' இயக்குனர்
ADDED : 1319 days ago
புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுகுமாருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் சுகுமார் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி மீண்டும் ஒரு அதிரடி - ஆக்ஷன் கலந்த படத்தில் சுகுமாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.