ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'
ADDED : 1318 days ago
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான, ஜோ பேபி இயக்கிய 'தி கிரேக் இந்தியன் கிச்சன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் இந்தப் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி வருகிறது. இதையடுத்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை சன்யா மல்ஹோத்ரா நடிக்கிறர். இயக்குனர் ஆரத்தி கடவ் இதன் ரீமேக்கை இயக்குகிறார்.