சுந்தர் சி படத்தில் நடிக்கும் திவ்யதர்ஷினி
ADDED : 1320 days ago
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறர்கள் . யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது .
மேலும் இப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் , யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போதன்,சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்திலிருந்து திவ்யதர்ஷினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் .