உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜார்ஜ் குளூனி உடன் அஜித்தை ஒப்பிட்ட குஷ்பு

ஜார்ஜ் குளூனி உடன் அஜித்தை ஒப்பிட்ட குஷ்பு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் திரைக்கு வந்துள்ள வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித்தின் நடிப்பு குறித்து பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகை குஷ்புவும் அஜித்தின் நடிப்பு குறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியுடன் அஜீத்தை ஒப்பிட்டுள்ள குஷ்பு, ஜார்ஜ் குளூனி தல! உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருகிறது என்று பதிவிட்டுள்ளார். அதோடு அஜித், வினோத், போனி கபூருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் குஷ்பூ, டார்லிங் ஹுமா குரேஷிக்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !