உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் நோ எவிக்ஷனா?

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் நோ எவிக்ஷனா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை விட்டு கமல் வெளியேறிய பின் நடிகம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்குகிறார். அவரது வருகை தமிழ் பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வார எவிக்ஷனில் ஸ்ருதி அல்லது சினேகன் வெளியேறலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இந்த வாரம் எவிக்ஷன் நடக்குமா? என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

அதற்கு காரணம் ஹவுஸ்மேட்டில் ஒருவரான வனிதா, ஏற்கனவே எவிக்ஷன் இல்லாமல் வெளியேறிவிட்டார். மேலும், சிம்பு தொகுப்பாளராக களமிறங்கி அவர் நடத்தப்போகும் முதல் ஷோ என்பதால் இந்த வாரத்தில் எவிக்ஷன் இருக்காது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !