மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகை காயத்ரி
ADDED : 1318 days ago
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. பெரும்பொரும் விஜய் சேதுபதியின் படங்களில் இவரை பார்க்க முடியும். தற்போது இவர் பகீரா, மாமனிதன், டைட்டானிக் காதலும் கவுந்து போகும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் மலையாள இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் நடிக்கும் படம் 'ன்னா தான் கேஸ் கோட்' . வினய் போர்ட்,சைஜு குருப், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் காயத்ரியும் இணைந்து நடிக்கிறார். இது காயத்ரி மலையாளத்தில் அறிமுகமாகும் முதல் படமாகும்.