டால்பின் உடன் விளையாட்டு : குடும்பத்தினர் உடன் ரம்பா குதூகலம்
ADDED : 1313 days ago
90களில் கனவு கன்னியாக இருந்தவர் ரம்பா. தொடை அழகி என்று புகழப்பட்டவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணியில் இருக்கும்போதே இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா, டொராண்டோவில் செட்டிலாகிவிட்டார். அங்கு தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது சினிமாவில் நடிக்கா விட்டாலும் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
கொரோனா காலத்தில் சமூக வலைத்தளம் பக்கம் வராத ரம்பா. தற்போது தனது குடும்பத்தினருடன், பஹாமாவுக்கு சுற்றுலா சென்ற பல படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தானும், தன் குடும்பத்தினரும் டால்பின்களுடன் விளையாடும் படங்களை வெளியிட்டு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பஹாமாஸுக்கு ஒரு குடும்ப விடுமுறைப் பயணம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.