உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் எண்ணம் இல்லை : அஜித் தரப்பு விளக்கம்

அரசியல் எண்ணம் இல்லை : அஜித் தரப்பு விளக்கம்

அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை. இதனை பலமுறை அவர் அறிவித்து விட்டார். தனது ரசிகர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதை அறிந்த அவர் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார். அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.

என்றாலும் அவ்வப்போது அவர் அரசியலுக்கு வருவார் என்று யாராவது கிளப்பி விடுவார்கள். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், அரசியலுக்கு அஜித் வருவார். இதுகுறித்து அவர் அம்மாவுடன் பேசி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இது நேற்று வைரலாக பரவியது. இதை தொடர்ந்து அஜித்தின் செய்தி தொடர்பாளரும், மேலாளருமான சுரேஷ் சந்திரா கூறுகையில் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. எனவே ஊடகத்தினர் இதுபோன்ற தவறான தகவல்களை உக்குவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !