உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அபி டெய்லர்' தொடரில் நடிக்க அம்மா தான் காரணம் - ரேஷ்மா

'அபி டெய்லர்' தொடரில் நடிக்க அம்மா தான் காரணம் - ரேஷ்மா

ஜீ தமிழ் சேனலில் 'பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா. இவர் அதே தொடரில் நடித்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் இணைந்து நடிக்கு 'அபி டெய்லர்' தொடரில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், கஷ்டப்பட்டு உழைக்கும் பெண் டெய்லராக அபி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரத்தை பற்றி கேட்டவுடன் ரேஷ்மா உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். காரணம் ரேஷ்மாவின் தாயார் உண்மையிலேயே டெய்லராக வேலை பார்த்து கஷ்டப்பட்டு தான் தன் குழந்தைகளை வளர்த்துள்ளார். எனவே, எமோஷனலாக அபி கதாபாத்திரத்துடன் கனெக்ட் ஆன ரேஷ்மா, தனது அன்னைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதிக சிரத்தையெடுத்து சிறப்பாக நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !