உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதயநிதி - மாரி செல்வராஜின் ‛மாமன்னன்' : வடிவேலு, கீர்த்தி சுரேஷூம் நடிக்கிறார்கள்

உதயநிதி - மாரி செல்வராஜின் ‛மாமன்னன்' : வடிவேலு, கீர்த்தி சுரேஷூம் நடிக்கிறார்கள்

கர்ணன் படத்தை அடுத்து உதயநிதியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படத்திற்கு ‛மாமன்னன்' என பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதோடு இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அதாவது வில்லன் வேடத்தில் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இவர்கள் தவிர்த்து நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !