மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1283 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1283 days ago
'சந்திரலேகா' தொடர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ மற்றும் அருண் குமார் ஆகியோர் மட்டும் தான் இதுநாள் வரையில் விலகாமல் லீட் ரோலில் நடித்து வந்தனர். இதில் சபரிநாதன் இரண்டாம் நாயகனாக நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திரலேகா தொடரை விட்டு விலகுவதாக கடிதத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அவருக்கு பதிலாக பிரபல நடிகர் அஸ்வின் குமார் இனி சபரிநாதனாக நடிக்கிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 'பெரிய மருது', 'சரணாலயம்', 'துருவங்கள் பதினாறு' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் 'தாமரை', 'லக்ஷ்மி கல்யாணம்', 'குல தெய்வம்', 'அழகிய தமிழ் மகள்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
1283 days ago
1283 days ago