மீனாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய கோல்டன் விசா!
ADDED : 1308 days ago
இந்தியாவை சேர்ந்த பல நடிகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்களை 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். அந்த வகையில், ஷாருக்கான், சஞ்சய் தத், மம்முட்டி, மோகன்லால், பார்த்திபன், திரிஷா, அமலாபால், காஜல் அகர்வால் என பல இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை மீனாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்ட் விசா வழங்கி இருக்கிறது. இந்த விசாவை பெற்றுக்கொண்ட மீனா துபாயில் நடக்கும் எக்ஸ்போவில் கலந்துகொண்டுள்ளார்.