உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நாளில் வெளியாகும் உதயநிதி - ஆர்கே சுரேஷ் படங்கள்

ஒரே நாளில் வெளியாகும் உதயநிதி - ஆர்கே சுரேஷ் படங்கள்

மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளியான படத்தை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாலா தயாரிக்கும் இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார் தமிழிலும் இயக்கியுள்ளார். ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இந்த படம் மே மாதம் 20ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹிந்தியில் 2019ம் ஆண்டு வெளியான ஆர்டிகிள்-15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படமும் அதே மே 20ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்திருக்கிறார். போனிகபூர் தயாரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !