ஜீவி 2 உருவாகிறது
ADDED : 1347 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது 2019ஆம் ஆண்டில் வி ஜே. கோபிநாத் இயக்கத்தில் உருவான ஜீவி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத்தே இயக்க, முதல் பாகத்தில் நாயகியாக நடித்த வெற்றியே மீண்டும் இப்படத்தில் நடிக்கிறார். கே எஸ் .சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதோடு முதல் பாகத்தில் பணியாற்றிய பெரும்பாலான நடிகர் நடிகைகளே இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.