விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக நடிக்கும் சன்னி லியோன்
ADDED : 1308 days ago
தமிழில் ஜெய் நடித்த வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியபடி என்ட்ரி கொடுத்த சன்னி லியோன். அதையடுத்து வடிவுடையான் இயக்கிய வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக சன்னிலியோன் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் தான் நடிப்பது குறித்து தெரிவித்துள்ள சன்னிலியோன், இப்படத்தில் விஷ்ணு மஞ்சு நாகேஸ்வரராவ் என்ற கேரக்டரிலும், தான் ரேணுகா என்ற கேரக்டரிலும் நடித்து வருவது தெரிவித்துள்ளார்.