இறுதி கட்டத்தில் வல்லான்
ADDED : 1331 days ago
சுந்தர்.சி நாயகனாக நடித்து வரும் படம் வல்லான். விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கிறார், மணி சேயோன் இயக்குகிறார். சுந்தர்.சியுடன் ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோரும் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இது முழுநீள ஆக்ஷன் படமாக தயாராகிறது.