உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நட்டி

மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நட்டி

ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதம் கதம், கர்ணன் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இதை தொடர்ந்து தற்போது குருமூர்த்தி என்ற படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி. இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

இதில் நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சத்ய தேவ் உதய சங்கர், இசை அமைக்கிறார் .

படம் பற்றி இயக்குனர் கே.பி.தனசேகர் கூறியதாவது: கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு சோதனை ஏற்படுகிறது. குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது. இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார், வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !