மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1278 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1278 days ago
சென்னை : தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இரண்டு தினங்களுக்கு மேலாக நடந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்ட என்ற விபரம் வெளியாகி உள்ளது.
அவற்றில் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய வீடு, அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரொக்க பணம், 8.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர போலியான ரசீதுகள் உருவாக்கி பொய் கணக்கு காண்பித்து ரூ.1000 கோடி வரி செய்து பலவற்றில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1278 days ago
1278 days ago