ராதிகா கொடுத்த பார்ட்டியில் பங்கேற்ற சூர்யா - ஜோதிகா
ADDED : 1337 days ago
1980 - 90களில் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ராதிகா. அதன்பிறகு சின்னத்திரையிலும் கொடி கட்டி பறந்தார். சமீபகாலமாக திரைப்படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார் ராதிகா. அந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.