பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமாகும் மாளவிகா மோகனன்
ADDED : 1308 days ago
தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தவர், தற்போது தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் மார்ச் 11ஆம் தேதி தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், அடுத்தபடியாக தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ராஜா டீலக்ஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை மாருதி இயக்குகிறார். இது உண்மையாகும் பட்சத்தில் தெலுங்கில் மாளவிகா மோகனன் அறிமுகமாகும் முதல் படம் இதுவாக இருக்கும்.