டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகிறது
ADDED : 1307 days ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது . அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான முதல் படம் இது. தமிழ் சினிமாவின் வெளியான ஹாரர் படடங்களில் முக்கியமான படம் டிமாண்டி காலனி. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அருள்நிதியே நாயகனாக தொடரலாம் என்றும், ஆனால் இயக்குனர் மட்டும் மாறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.