100 மில்லியன் பார்வைகளை கடந்த குட்டி ஸ்டோரி
ADDED : 1353 days ago
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் மாஸ்டர். அனிரூத் இசையில் இந்த படத்திலிருந்து வெளியான வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதிலும் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யு-டியூப்பில் 320 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில் இப்போது விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதை ரசிகர்கள் டிரண்ட் ஆக்கி வருகின்றனர்.