இந்த வயசுல கவர்ச்சி காட்டாம 60 வயசுலயா காட்ட முடியும் : மாளவிகா காட்டம்
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், பேட்ட, மாஸ்டர், படங்களில் நடித்தார். தனுசுடன் நடித்துள்ள மாறன் படம் நாளை ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதுகுறித்து அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ரஜினி, விஜய்யுடன் நடித்திருந்தாலும் அவை பெரிய கேரக்டர் என்று சொல்ல முடியாது. இந்த படத்தில்தான் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கிறேன். இதில் போட்டோ ஜார்னலிஸ்டாக நடித்திருக்கிறேன். அடுத்து தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கிறேன். தமிழ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எனது தந்தை புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஆனால், அவர் போன்று எனக்கு ஒளிப்பதிவில் ஆர்வம் இல்லை. சின்ன வயதிலிருந்தே நடிப்பில்தான் ஆர்வம். பிற்காலத்தில் அனுபவங்களை கொண்டு படம் இயக்கலாம். ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை பிடிக்கும், மிகுந்த போராட்டமான வாழ்க்கை அவருடையது. அவருடைய வாழ்க்கை சினிமாவானால் அதில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது.
இப்போதைக்கு எனக்கு கமர்ஷியல் ஹீரோயின் என்ற இமேஜ் இருக்கிறது. ஆனால் எனக்கு எல்லாவிதமான கேரக்டரில் நடிக்க வேண்டும், சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் வித்தியாசமின்றி நடிக்க வேண்டும் என்பதே ஆசை. என்றார்.
பேட்டியின்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான படங்களை வெளியிடுகிறீர்களே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மாளவிகா, எனக்கென்ன 60 வயசா ஆகிவிட்டது? இந்த வயசுல கவர்ச்சி காட்டாம 60 வயசுலயா காட்ட முடியும். என்றார்.