4000 திரைகளுக்கு மேல் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் 'ஜேம்ஸ்'
ADDED : 1307 days ago
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சில மாதங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக சில படங்களில் நடித்து வந்தார் . அப்படங்களில் ஒன்றான 'ஜேம்ஸ்' படத்தை சேத்தன்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் படத்தில் புஜித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளார். வரும் மார்ச் 17-ம் தேதி புனித் பிறந்தநாளில் ஜேம்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 4000 திரைகளுக்கு மேல் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது .