அஜித்தின் 61 வது படம் குறித்த சுவாரசிய தகவல்
ADDED : 1306 days ago
அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அஜித் நடிக்கும் 61 வது படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி அஜித்தின் 61வது படம் கொள்ளையடிப்பது (Heist) குறித்து தான் இருக்கப் போகிறதாம். இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாகவும் , படப்பிடிப்பு ஐதராபாத்தில் மார்ச் மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .