ரஜினிக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம்
ADDED : 1351 days ago
ரஜினிகாந்த் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் வெளியானபோது 'கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' என்ற பெயரில் தன் 18 வயதில் முதல் ரசிகர் மன்றத்தை ஏ.பி.முத்துமணி மதுரையில் தொடங்கினார்.
அதன் பிறகு பல ரசிகர்மன்றங்கள் பெருக தொடங்கின . கடந்த 2021 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி மற்றும் அவரது மனைவியிடம் போனில் நலன் விசாரித்தார் ரஜினி .
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி நேற்று உயிரிழந்தார் .இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . முத்துமணியின் திருமணம் ரஜினினியின் வீட்டு பூஜை அறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .