இறுதிக்கட்டத்தில் சர்தார்
ADDED : 1305 days ago
கார்த்தி தற்போது நடித்து வரும் படம் சர்தார். இதனை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதில் கார்த்தி அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். யூகி சேது, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு கொடைக்கானலில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மொத்த குழுவும் மைசூருக்கு சென்றுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடை பெறுகிறது. அப்பா கார்த்தியின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து அதற்கு பிறகான பணிகள் நடக்க இருக்கிறது. மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.