எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் கட்டுகிறது கேரள அரசு
ADDED : 1351 days ago
தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று புகழப்பட்ட அவர் கர்நாடக சங்கீதத்திற்குள் முடங்கி இருந்த திரைப்பாடல்களை வெகுஜன மக்களுக்கான இசையாக மாற்றியவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
தமிழ் இசை அமைப்பாளர் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அறியப்பட்டாலும் அவர் ஒரு மலையாளி. கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர். தனது மண்ணின் மைந்தன் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக முதல் கட்டடமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இந்த நினைவு மண்டபம் அவர் இசை படித்து வளர்ந்த பாலக்காட்டில் கட்டப்படுகிறது.