உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராதேஷ்யாம் - முதல் நாள் வசூல் ரூ.79 கோடி என அறிவிப்பு

ராதேஷ்யாம் - முதல் நாள் வசூல் ரூ.79 கோடி என அறிவிப்பு

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் பிரபாஸின் முந்தைய பான்--இந்தியா படமான 'சாஹோ' படத்தின் வசூலை முறியடிக்கும் என பட வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், படம் காதல் படமாக மட்டுமே இருப்பதால் படத்திற்கான வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் படத்தைத் தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் அவர்களது சமூகவலைதளத்தில் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.79 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், மொழிவாரியாக எவ்வளவு வசூல் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை. தயாரிப்பு நிறுவன அறிவிப்பின்படி இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த தெலுங்குப் படங்களின் முதல் நாள் வசூலில் 'ராதேஷ்யாம்' முதலிடத்தைப் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !