உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆடை குறித்த விமர்சனம்- சமந்தா கொடுத்த பதிலடி!

ஆடை குறித்த விமர்சனம்- சமந்தா கொடுத்த பதிலடி!

சில தினங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் பச்சை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார் சமந்தா. அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்ததை அடுத்து பெருவாரியான ரசிகர்கள் அதற்கு பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்தபோதும், பலர் மோசமாக விமர்சனமும் செய்திருந்தார்கள். இந்த நிலையில் தனது அந்த புகைப்படங்களை பார்த்து தவறாக விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் சமந்தா.

அதில், யாராக இருந்தாலும் பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களை தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, அந்தஸ்து, நிறம் என ஒரு பெரிய பட்டியலே போடுகிறார்கள். இப்போது நாம் 2022-ல் இருக்கிறோம். இந்த காலகட்டத்திலும் பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களை தீர்மானிப்பது விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டு, உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !