மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம்
ADDED : 1342 days ago
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மைசூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஹேமந்த்ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமாத்துறையில் புனித்ராஜ்குமார் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், அவரது தொண்டுகளுக்காகவும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறோம். மார்ச் 22-ந்தேதி நடக்கவுள்ள மைசூர் பல்கலைக்கழகத்தின் 102ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் சார்பாக அவரது மனைவி அஸ்வினி பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். புனித்ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் வருகிற மார்ச் 17-ந்தேதி வெளியாக உள்ளது.