பயணியை வெளியிட்ட ரஜினி
ADDED : 1349 days ago
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இசை ஆல்பம் 'முசாபிர்'. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த பாடலின் தமிழ் பதிப்பிற்கு பயணி என பெயரிட்டுள்ளனர். இந்த பாடலை அனிருத் பாடி உள்ளார். பயணி இசை ஆல்பத்தை நடிகர் ரஜினி வெளியிட்டார். இந்த இசை ஆல்பத்தை தெலுங்கில் அல்லு அர்ஜுனும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.
மகளின் ஆல்பத்தை வெளியிட்டு ரஜினி கூறுகையில், 'என் மகள் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இயக்கியுள்ள பயணி ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அவர் எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பார். ஐ லவ் யூ' என்றார்.