வாடிவாசல் படத்திற்காக 400 காளைகள்
ADDED : 1544 days ago
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தை தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக 400 க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.