மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1294 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1294 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1294 days ago
வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் அஜித்குமார். இந்த படத்திற்காக சென்னையில் உள்ள அண்ணாசாலை போன்று ஐதராபாத்தில் செட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், அஜித்திற்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கப் போவதாகவும் சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது அஜித் நடிக்கும் 63வது படத்தை அவரை வைத்து ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கிய சிவா இயக்கப்போவதாக தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
1294 days ago
1294 days ago
1294 days ago