தனுசை பார்த்து ஓடியவர்கள்
ADDED : 1344 days ago
தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவரை பார்த்து பலர் ஓடியதை இயக்குனரும், தந்தையுமான கஸ்துாரி ராஜா நினைவு கூர்ந்தார். தங்கர்பச்சான் இயக்க விஜித்பச்சன் நாயகனாக நடித்துள்ள டக்கு முக்கு டிக்கு தாளம் படவிழாவில் கஸ்துாரி ராஜா பேசுகையில், 'தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை ஒருவருக்கு பிரத்யேகமாக போட்டு காண்பித்தேன். அவர் பாதியிலேயே கிளம்பிவிட்டார். நான் அவரிடம் போனில் பேசிய போது, 'நம் பையனை நாம் பார்க்கலாம். காசு கொடுத்து பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்' என்றார். ஆனால், அவரே இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 'எப்படியாவது தனுஷ் படத்தை வாங்கி கொடுங்கள்' என்று கேட்டார்' என்றார்.